இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி | இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - நண்பர்கள் இருவர் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளர் சின்னத்தம்பி மற்றும் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமு ஆகிய இருவரும், பந்தல் அமைப்பதற்காக நெக்குந்தி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னை - பெங்களுார் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியுள்ளது. இதில், இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.