செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்று கரையோரம் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 251 ஆம் ஆண்டு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை மற்றும் பூங்கரம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து பாலாற்றில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அசுரனின் கண் முட்டை எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது, அப்பொழுது அசுரனின் கண் முட்டையை எடுக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர், இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியை காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் வானவேடிக்கைகள் நடைபெற்றது, அதனை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.