தமிழ்நாடு

“என்னை அடித்து வெளியேற்றினார்கள்” - வனிதா விஜயகுமார் பேட்டி

“என்னை அடித்து வெளியேற்றினார்கள்” - வனிதா விஜயகுமார் பேட்டி

Rasus

போலீசார் தன்னை அடித்து துன்புறுத்தி வெளியேற்றியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது.  ஏராளமான அறைகளை கொண்ட இந்தப் பங்களா சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதாவுக்குப் படப்பிடிப்புக்காக கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா, வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வனிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து வனிதா இன்று காலை வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து வனிதா கூறும்போது, “ வீட்டை காலி செய்யுமாறு என் அப்பா விஜயகுமார் மிரட்டினார். வேறு வாடகை வீட்டிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தினார். 25,000 சதுர அடி அளவு கொண்ட வீட்டில் நான் வெறும் 1000 சது அடி அளவு உள்ள இடத்தில் இருந்தால் என்ன.? வீட்டில் இப்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் என் தந்தை விஜயகுமார் என்னை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். ஏற்கனவே நான் 1995 களில் நடித்து நான் ஈட்டிய பொருளும் இந்த வீடு கட்டுவதற்கு உதவியுள்ளது. அப்படியிருக்கும்போது நான் இந்த வீட்டில் இருக்க உரிமை இருக்கிறது. ஆனாலும் போலீசார் என்னை அடித்து துன்புறுத்தி வெளியேற்றினர். நான் கடன் வாங்கி படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு சட்டப்படியான வாரிசு நான்” என கூறினார்.