தமிழ்நாடு

மீண்டும் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா: அதிரடியாக உயர்த்தப்பட்ட நுழைவுக்கட்டணம்

webteam

 வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது

தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவில் ஒன்றான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு
வருடந்தோறும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கொரோனா
அச்சுறுத்தல் காரணமாக வண்டலூர் பூங்கா மார்ச் 17ம் தேதி மூடப்பட்டது. கிட்டத்தட்ட 8 மாதங்கள்
மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொதுமுடக்க தளர்விற்கு பிறகு வழிக்காட்டு நெறிமுறைகளுடன் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வருகை தரும் பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பூங்காவிற்கான அனுமதி சீட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டுமென்றும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் வண்டலூர் பூங்காவில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு கட்டணம்
ரூ.75ல் இருந்து ரூ.90ஆகவும், சிறியவர்களுக்கு கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.50ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 7000 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது