தமிழ்நாடு

வண்டலூர் பூங்கா: காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் - திறந்து வைத்த அமைச்சர்

வண்டலூர் பூங்கா: காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் - திறந்து வைத்த அமைச்சர்

kaleelrahman

வண்டலூர் பூங்காவில் தனியார் நிறுவனங்களின் மூலம் காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. அதை வனதுறை அமைச்சர் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

சென்னையை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் தனியார் நிறுவனங்களின் உதவியோடு காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரங்களை இரண்டு இடங்களில் நிறுவியுள்ளனர். அதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 1000 லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படும். அதை பூங்காவிற்கு வருபவர்களின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பேசியபோது... பொதுமக்களுக்கு தினமும் 2000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பூங்காவில் நெருப்பு கோழிகள் தொடர்ந்து இறந்தது குறித்த காரணம் கேட்டதற்கு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

பூங்கா நிர்வாகம் தரப்பில் இறப்பிற்கான காரணம் தெரியவரவில்லை, மருந்துகள் கொடுக்கப்பட்டு உயிரிழப்பு இல்லாதவாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கூறினர்.