தமிழ்நாடு

சாத்தூர் அருகே பள்ளத்தில் செங்குத்தாக வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே பள்ளத்தில் செங்குத்தாக வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

Rasus

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மாதாங்கோவில்பட்டியை சேர்ந்த சுமார் 20 பேர் வேன் ஒன்றில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். கோயிலில் தரிசனத்தை முடித்த அவர்கள் மீண்டும் வீடு திரும்பியபோது வேன், ராமச்சந்திராபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது வேனின் வீல் கழன்றதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் அருகே இருந்த பள்ளித்தில் செங்குத்தாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.