வால்பாறைக்கு சுற்றுலா வந்த 60 வயதான மைக்கேல் என்பவர்
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது வால்பாறை வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதி அருகே உள்ள சாலையில் யானை நின்று கொண்டிருந்ததால், இரு புறமும்
வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், யானையை கடந்து விடலாம் என நினைத்து, மைக்கேல் அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தை யானை தாக்கியதில், மைக்கேல் கீழே விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓட முயன்ற அவரை, யானை துரத்திச் சென்று தாக்கியதில் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.