தமிழ்நாடு

வால்பாறை: மரத்தில் பதுங்கியிருந்த 11 அடி நீள ராஜநாகம்.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!

kaleelrahman

வால்பாறை அருகே தேயிலை தொழிற்சாலை அருகில் இருந்த 11 அடி நீளம் ராஜ நாகத்தை பிடித்த வனத்துறையினர் அதை வனப் பகுதிக்குள் விட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிற்சாலை வளாகத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் ராஜ நாகம் ஒன்று உள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் மானம்பள்ளி வனச்சரக வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினரும் பாம்புகள் பிடிக்கும் தன்னர்வளர்களும் இணைந்து தொழிற்சாலை பகுதி மரத்தில் இருந்த ராஜநாக பாம்பை பிடித்தனர். இந்த பாம்பு சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பெண் பாம்பு என்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் பாம்பை வனப் பகுதிக்குள் விட்டனர்.