தமிழ்நாடு

காதலர் தினம்: சாக்லேட் தாஜ்மஹால்...!

webteam

கோவையில் தாஜ்மஹாலை சாக்லேட்டை கொண்டு வடிவமைத்து உள்ளனர். 

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் தாஜ்மஹாலை சாக்லேட்டை கொண்டு வடிவமைத்து விற்பனைக்காக வைத்து உள்ளனர். காதலர் தினம் இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாடப்பட உள்ள சூழலில், தஜ்மஹால் பல்வேறு பரிசுப் பொருட்கள் கடைகளில் குவிந்து உள்ளது. இந்நிலையில் வித்யாசமாக முழுவதும் சாக்குலேட்டுகளை கொண்டு தாஜ்மஹாலை கோவையை சேர்ந்த இல்லத்தரசி சுஜாதா வடிவமைத்து விற்பனைக்காக வைத்து உள்ளார். 

முழுவதும் கோகோ பவுடரை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தாஜ்மஹால் எந்த ரசாயனம் கலக்காமல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஹார்ட் வடிவிலான சாக்குலேட்டுகள் என பல்வேறு விதங்களில் முற்றிலும் சாக்குலேட்டுகளால் கொண்டு தயாரிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் வாடிக்கையாளர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.