சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உள்துறை செயலாளர், சேலம் மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த மாணவி வளர்மதி மீது 6 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டு வளர்மதி சிறையிலடைக்கப்பட்டார். ஜூலை 17 ஆம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த தனது மகள், அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக வளர்மதியின் தந்தை மாதையன் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் உள்துறை செயலாளர், சேலம் மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரின் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.