மறைந்த பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அனைத்து மாநில பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் நடைபெற்ற, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டனர்.
தமிழகம் சார்பில் மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழகம் கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தியானது சென்னை, ராமேஸ்வரம் உட்பட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.