காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு குறித்து வைரமுத்து கருத்து தெரித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் இன்று அளித்தத் தீர்ப்பில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரின் அளவை குறைத்துள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்பட்டு, அதில் 177.25 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல், தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட தண்ணீர் கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்; நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், ‘தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்; எதிர்கொள்வது மறுபுறம். என்ன செய்யப் போகிறோம்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியில், ‘தீர்ப்பா-தீர்வா?’ என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.