ஆண்டாள் பற்றி வைரமுத்து தெரிவித்துள்ள கருத்தில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து பேசியதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அவர் மீது கொளத்தூர், சிந்தாதிரிபேட்டை காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட்டுள்ளது. இந்நிலையில் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் கோரி வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ’அதில் வி.ஹெச்.பி மற்றும் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்திவிட்டன’ என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘ஆண்டாள் பற்றி வைரமுத்து தெரிவித்துள்ள கருத்தில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை
ஆராய்ச்சிக் கட்டுரையின் கருத்தைத்தான் அவர் மேற்கோள் கூறியுள்ளார். வைரமுத்து தன் சொந்த கருத்தைக் கூறவில்லை. அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை’ என்றனர்.
பின்னர், அரசு வழக்கறிஞர் ஆலோசிக்க அவகாசம் தந்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.