தமிழ்நாடு

“தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம்” - மோடிக்கு வைரமுத்து பாராட்டு 

webteam

தாயகத்திலும் தமிழை உயர்த்தினால் நாங்களே நன்றி உரைப்போம் என்று பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர், “உலகம் பல்வேறு நாடுகளாக பிரிந்து இருந்தாலும் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் தான். உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பாடல் வாயிலாக புலவர் கணியன்பூங்குன்றனார் உலகிற்கு உரைத்துள்ளார்” எனக் கூறினார். 

பிரதமர் மோடி ஐநாவில் தமிழில் பேசியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே... தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே” எனத் தெரிவித்துள்ளார்.