தமிழ்நாடு

நிலுவையில் இருந்த சொத்துவரி - 4 வருடங்களுக்கு பிறகு செலுத்தினார் வைரமுத்து

Sinekadhara

சென்னை மாநகராட்சி சொத்து வரி நிலுவைத்தொகையை நான்கு வருடங்களுக்கு பிறகு செலுத்தினார் பாடலாசிரியர் வைரமுத்து.

சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட் புரத்தில் உள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு சொந்தமான திருமண மண்டபமான பொன்மணி மாளிகை, கடந்த 27 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடந்த 4 வருடங்களாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி 8 லட்சம் ரூபாய் நிலுவையில் வைத்திருந்ததன் காரணமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

4 வருடங்கள் நோட்டீஸ் கொடுத்தும் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தியதால் இன்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபத்திற்க்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வைரமுத்துவுக்கு சொந்தமான இந்த திருமண மண்டபம் தொடர்பாக, கட்டாமல் இருந்த 7,93,241 ரூபாய் சொத்து வரி தற்போது வைரமுத்து தரப்பில் இருந்து கட்டபட்டதன் காரணமாக, மாநகராட்சி சார்பில் சீல் வைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.