மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவதாக மதிமுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின் கூட்டணியின் போது திமுக-மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி மதிமுக கட்சிக்கு ஒரு மாநிலங்களவை மற்றும் ஒரு மக்களவை இடம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கூட்டம் மதிமுக சார்ப்பில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று அறிவித்தது. தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வில்சன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.