தமிழ்நாடு

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” - தீர்ப்பு குறித்து வைகோ நெகிழ்ச்சி

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” - தீர்ப்பு குறித்து வைகோ நெகிழ்ச்சி

webteam

ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தனக்கு மகிழ்ச்சியான நாள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

2009ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோவிற்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. அதன்படி வைகோவிற்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் மதிமுவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வைகோ தேர்வு செய்யப்படயிருந்தார். இதற்கிடையே தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து பேசிய வைகோ, “இன்று எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான நாள். தண்டனை குறித்து அறிவித்ததும் விரைவில் அறிவியுங்கள் என்று கேட்டேன். குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என நான் கேட்டதாக நீதிபதி கூறியது தவறு. அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் வாதிட்டேன். நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு நான் எதுவும் கூறவிரும்பவில்லை” என்று தெரிவித்தார்.