திருக்குறளைவிட பகவத் கீதை உயர்ந்ததா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழுப்பூரில் மதிமுக மாணவர் அணியினரின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட நிர்வாகிகள் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். குறிப்பாக நீர் தேர்வு, கதிராமங்கலம் போராட்டம், மாணவி வளர்மதியின் கைது உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடைநீக்கத்துக்கு வரவேற்பு உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அப்துல் கலாம் மணிமண்டபத்தில் திருக்குறளுக்குப் பதிலாக பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திருக்குறளை விட பகவத் கீதை உயர்ந்ததா எனவும் அவர் வினாவினார்.