vaiko
vaiko pt desk
தமிழ்நாடு

“எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தகர்த்து முதல்வர் ஸ்டாலினின் பயணம் வெற்றியடையும்” - வைகோ

webteam

தமிழர் தந்தை என்றழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வைகோ கலந்து கொண்டு சி.பா.ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது, “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கு மதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்துகிறோம். சிங்கப்பூர் சென்று சட்டம் படித்துவிட்டு, லண்டனில் படித்தபோது பத்திரிகை நிருபராக மாறி, அதன் பிறகு பெரும் பொருள் ஈட்டி வழக்கறிஞராக தமிழகத்திற்கு வந்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.

தமிழனுக்காக பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக மாலை முரசு நாளிதழை தொடங்கினார். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகையை தொடங்கினார்.

ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து அதன்பிறகு தான் சட்டப் பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்” என்றார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் பற்றி பேசுகையில், “வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க் கட்சிகளுக்கு வேறுவேலை இல்லை. வெற்றியோடு ஸ்டாலின் தமிழகம் திரும்புவார்.

CM stalin

மதுவிலக்கு வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நான் நடைபயணம் மேற்கொண்டேன். தற்போது திமுக அரசு 500 மதுக் கடைகளை மூட முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடியது” என்றார்.

EPS

தொடர்ந்து “நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க் கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றும் கூறினார்.