அறுவை சிகிச்சை வெற்றி பெற்று ம.நடராஜன் பூரண குணமடைவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவின் கணவர் ம.நடராஜனை, வைகோ சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடராஜனிடம் பரிபூரண நலம் பெறுவீர்கள் என்று கூறினேன். அவரது உடல்நிலை குறித்து பெரிய டாக்டர்களிடம் பேசினேன். கல்லீரல் பிரச்னைக்காக நடராஜனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அந்த சிகிச்சை முழு வெற்றி பெறும், அவர் பூரண நலம் பெற்று மீண்டும் பழைய நடராஜனாக வருவார். அவர் குணமடைந்த பின்னர் மீண்டும் பார்ப்பேன்.” என்று கூறினார்.