அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் முழு மூச்சோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற முடியும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக நேரடியாக களத்தில் இறங்கிய வைகோ மின்சார ரம்பங்கள் கொண்டு மரங்களை வெட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐஐடி தரப்பில் அறிவுக்கு ஒவ்வாத காரணங்களைக் கூறி சீமை கருவேல மரத்தை அழிக்க நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றும் பணியில் அரசுடன், தனியார் நிறுவனங்களும் முழு மூச்சில் களமிறங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.