ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், மாணவி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். கல்லூரி மாணவி வளர்மதியை விடுவிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் துரப்பணக் கிணறுகள் தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளர்.