தமிழ்நாடு

வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும்... வைகோ வலியுறுத்தல்

வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும்... வைகோ வலியுறுத்தல்

webteam

பெட்ரோல், டீசலுக்கு உயர்த்தப்பட்டுள்ள மதிப்புக் கூட்டு வரியை திரும்பப் பெற வேண்டுமென மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து மதிமுக பொதுச்செய்லாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் வரி உயர்வால் விலைவாசி உயரும் என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். எனவே வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சதவிகித அளவில் செய்யப்பட்டுள்ள உயர்வானது இனி வரும் காலங்களில் செய்யப்படும் ஒவ்வொரு உயர்விலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். வறட்சி, கடும் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தி உள்ளதாக ஜி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.