தமிழ்நாடு

60 அடியை எட்டிய வைகை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

webteam

8 மாத இடைவெளிக்கு பின்னர் வைகை அணை 60 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடிக்கு மேல் உள்ளதால்  அணையில் இருந்து வைகை அணைக்கு 2200 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 60.70 அடியாக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நீர் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவருவதால் இம்மாத இறுதியில் வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.