வாகை சந்திரசேகர் pt desk
தமிழ்நாடு

நடிகர் விஜய் அல்ல 100 ஹீரோக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது – வாகை சந்திரசேகர்

அரசியலில் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். விஜய் இல்லை இன்னும் நூறு ஹீரோக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பூவிருந்தவல்லி ஒன்றியம் கொசவன்பாளையம் பகுதியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பின்னர் பேசிய வாகை சந்திரசேகர்...

தவெக தலைவர் விஜய்

உலகில் மிகப்பெரிய நடிகர் பிரதமர் மோடி. தமிழ்நாடு வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு பாரதியார் திருவள்ளுவர் என பேசுவார். பின்பு டெல்லி சென்று தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் ஒழிக்க வேண்டும் என எண்ணுவார். ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையால் வட மாநிலங்களில் பல மாநிலங்களில் தாய் மொழி முற்றிலும் அழிந்து வருகிறது. இதனால் அங்கு கல்வி கற்கும் சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த், கமலஹாசன் என ஏராளமான நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர் திமுக நடிகர் எம்ஜிஆரை பார்த்த கட்சி விஜய் இல்லை இன்னும் நூறு ஹீரோக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு கலைஞர் ஸ்டாலின் உதயநிதி என மூன்று ஹீரோக்கள் உள்ளனர் விஜய் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார் என்று வாகை சந்திரசேகர் பேசினார்.