தமிழ்நாடு

"வ.உ.சியின் தொலைநோக்குப் பார்வை நமக்கு உத்வேகம்" : கோவையில் மோடி பேச்சு

"வ.உ.சியின் தொலைநோக்குப் பார்வை நமக்கு உத்வேகம்" : கோவையில் மோடி பேச்சு

webteam

கப்பல் போக்குவரத்தில் வ.உ.சியின் தொலைநோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 12,400 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை கோவை கொடிசியா வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்சியில் பேசிய மோடி, “இந்தியாவின் தொழில்வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையானது மின்சாரம். வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. புதிய அனல்மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 65% க்கும் அதிகமான மின்சாரம் தமிழகத்திற்கே வழங்கப்படும்.

கடல்சார் வணிகம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி குறித்த பாரம்பரியம் கொண்டது தமிழகம். கப்பல் போக்குவரத்தில் வ.உ.சியின் தொலைநோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கூட்டத்தில், "‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’. இதன் பொருள், உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே சிறப்பாக வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. இந்திய தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ” என்று திருக்குறளை சுட்டிக்காடி பேசியிருந்தார்.