தமிழ்நாடு

திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பதவி பறிப்பு

webteam

திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தவர் வி.பி.துரைசாமி. இவர் மாநிலங்களை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. அருகில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் முடிவெடுப்பதாக இவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் முருகனைச் சந்தித்திருந்தார். இந்நிலையில் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், வி.பி.துரைசாமிக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த வி.பி.துரைசாமி தனது பதவி பறிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்று தான் எனத் தெரிவித்துள்ளார்.