தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தம்மை பற்றிய விவரங்களை வழங்கக்கூடாது என கர்நாடகா சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.
இத்தகவலை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடகா சிறைத்துறை, தன்னை பற்றிய விவரங்களை ஆர்டிஐ-யின் கீழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த 9ஆம் தேதி சசிகலா சிறை நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் விடுதலையாகும் தேதி உள்ளிட்டவற்றை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு விண்ணப்பங்கள் பெறப்படுவதை அறிந்தேன் என கூறியுள்ளார்.
அரசியல் உள்நோக்கத்துடனே இத்தகைய விவரங்கள் கேட்கப்படுவதாக கூறியுள்ள சசிகலா, தன்னை பற்றிய விவரங்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.