நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளித்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தென்காசி அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து, மனைவி சுப்புலட்சுமி, இரண்டு பெண் குழந்தைகள் ஆகிய நால்வரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று தீக்குளித்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமியும், அவரது மகள்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் இசக்கி முத்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சுப்பு லட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.