தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமை : இளைஞரின் விபரீத முடிவு?

கந்துவட்டி கொடுமை : இளைஞரின் விபரீத முடிவு?

webteam

ஈரோட்டில் கந்துவட்டி தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. 

ஈரோட்டைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் மணல் விற்பனை செய்து வந்துள்ளார். கோணவாய்க்காலைச் சேர்ந்த ஜவஹர், முருகன் மற்றும் சித்தேஷ் ஆகியோர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில், இவர் 5 லட்சம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். அந்தப் பணத்தில் 2 லாரிகளை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. 

வாங்கிய கடனுக்கு அதிக வட்டி தரும்படி 3 பேரும் தட்சிணாமூர்த்திக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தைச்‌ சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, 2 லாரிகளையும் எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தட்சிணாமூர்த்தி லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பு : எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பதும் தீர்வல்ல; தற்கொலைக்கு முயன்றால் சட்டதின் முன் தண்டிக்கப்படுவோம். தற்கொலை நம்மை கோழையாக்கும். தற்கொலை  எண்ணத்தில் இருந்து மீள பல்வேறு அமைப்புகள் பயிற்சி அளிக்கின்றன. அதனை பயன்படுத்தி வாழ்க்கையை நாமே மாற்றியமைக்கலாம் 

சினேகா அமைப்பு முகவரி : எண் 11, பார்க் வியூ சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை 28.

தொடர்பு எண் : 044 - 24640050, 24640060