தமிழ்நாடு

நீங்கிய தடை... ரூ.2 லட்சம் வரை விலைபோன ஜல்லிக்கட்டு காளைகள்

நீங்கிய தடை... ரூ.2 லட்சம் வரை விலைபோன ஜல்லிக்கட்டு காளைகள்

webteam

தைப்பூசத்தை ஒட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் இரண்டு லட்சம் ரூபாய் வரை மாடுகள் விற்பனையாகியுள்ளன.

கிருஷ்ணகிரி அருகே காட்டினாயனபள்ளியில் நடைபெற்ற சந்தையில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து மாடுகள், கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். காளைகள் ஜோடி ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகின. ஜ‌ல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்திருப்பதை ஒட்டி காளைகள் அதிகளவில் விற்பனையாவதாகவும், அதிக விலைக்கு மக்கள் வாங்கிச்செல்கிறார்கள் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.