நேற்றைய தினம் (9.4.2025) பொள்ளாச்சியை அடித்த செங்குட்டுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மெட்டிரிகுலேஷன் பள்ளி ஒன்றில், 8 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பின் வெளியில் அமரவைத்து தேர்வு எழுதவைத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி வெளியில் உட்கார்ந்து தேர்வு எழுதுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தின் சிறுமியின் தாய் கேட்டபோது, சிறுமி பூப்பு எய்தியதாகவும், இதன் காரணமாகவே வகுப்பறையின் வெளியில் அமரவைத்து தேர்வு எழுதவைத்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் உறவினர்கள் கேட்டதற்கு, 'இப்படிதான் செய்வோம் என்றும், வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் கூறியதாக உறவினர்கள் குற்றச்சாட்டிகளை முன்வைக்கின்றனர்.
இதன் அடிப்படையில் சிறுமியின் தாத்தா சார் ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், “ பள்ளிக்கு வெளியில் அமரவைத்து முழு ஆண்டு தேர்வு எழுத வைத்துள்ளார்கள். இது மாணவிக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இதற்கு தக்க விசாரணை நடத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறையிக்கு தகவல் செல்ல, இது குறித்து தக்க விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை முடிவின் அடிப்படையில். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு கூட, இனிமேல் இதுபோன்று மாணவிகளை தனியாக அமர்த்த கூடாது எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
அறிவியல் முன்னேற்றத்தில் திழைத்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற தீண்டாமைகள் இன்னும் தொடர்வது வேதனை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.