paddy
paddy pt desk
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: ஏரி கரையை உடைத்த மர்ம நபர்கள் - நீரில் மூழ்கி வீணான நெற்பயிர்கள்

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு ஊராட்சியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக ஏரி உள்ளது. அண்மையில் மிக்ஜாம் புயலால் காரணமாக பெய்த கன மழையினால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

Lake water

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஏரியின் கரையை அடையாளம் தெரியாத சிலர் உடைத்ததாக தெரிகிறது. இதனால் ஏரியில் இருந்த நீர் ஆர்ப்பரித்து வெளியேறி அருகிலிருந்த கிராமத்துக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக நாகாத்தம்மன் கோவில் தெரு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் முழங்கால் அளவுக்கு வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக ஏரியில் இருந்து வெளியேறிய நீர் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்களை சூழ்ந்துள்ளது. மேலும் அதே பகுதியில் 300 ஏக்கருக்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில்மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. ஏக்கருக்கு 35,000 ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.