தமிழ்நாடு

அரசு பேருந்துக்கு தீ வைப்பு: அலறியடித்த பயணிகள்..!

அரசு பேருந்துக்கு தீ வைப்பு: அலறியடித்த பயணிகள்..!

Rasus

புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழக பேருந்துக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்து கனகசெட்டிகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்கினர். இதனால் ஓட்டுநர் பேருந்தை அங்கேயே நிறுத்தியுள்ளார். பின்னர் அங்கு வந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை பேருந்தின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி அலறியடித்து ஓடினர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே தகவல் அறிந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நாராயணசாமி உத்தரவிட்டார்.