திருவான்மியூர் குப்பம் கடற்கரை ஓரமாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.
சென்னை திருவான்மியூர் குப்பம் கடற்கரை பகுதியில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளதை கண்டறிந்துள்ளனர். ஏறக்குறைய 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கி இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். அந்தப் பகுதி மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருவான்மியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் எவ்வித காயமும் இல்லை. கண்ணில் மட்டும் மீன் கடித்த காயம் உள்ளது. கரை ஒதுங்கிய அந்த இளைஞர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ளார். கரை ஒதுங்கிய நபர் யார் என்பது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.