தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறித்து இந்திய அளவிலான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் இந்தாண்டு மட்டும் 31,453 பேர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆந்திரா, தெலங்கானாவில் 6,429 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிராவில் 5,585 பேரும், கர்நாடகாவில் 4,803 பேரும் இந்தாண்டு எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தமிழகத்தில் 2,375 ஆக குறைந்துள்ளது. இதன்படி எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.