தமிழ்நாடு

'கழிப்பறையே பயன்படுத்தாத நமக்கு சுகாதார வளாகம் ஏற்படுத்தியுள்ளார் பிரதமர்' - எல்.முருகன்

'கழிப்பறையே பயன்படுத்தாத நமக்கு சுகாதார வளாகம் ஏற்படுத்தியுள்ளார் பிரதமர்' - எல்.முருகன்

JustinDurai
'கழிப்பறையே பயன்படுத்தாக நமக்கு பிரதமர் மோடி சுகாதார வளாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
விருதுநகர் மாவட்டம் அருகே ரோசல்பட்டி கிராமத்தில் நடந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன், ''இந்தியாவையும், அதன் கலாச்சாரத்தையும், பாராம்பரியத்தையும் காக்கும் விதமாகவும் இந்து சமயத்தில் தங்களுக்கு உள்ள ஈடுபாட்டை காக்கவும் சிறிய கோயில்கள் எழுப்பி மக்கள் காத்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்கள் கடைக்கோடி மக்களும் முன்னேறும் வகையில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் கொண்டு வந்துள்ளார். கழிப்பறையே பயன்படுத்தாக நமக்கு சுகாதார வளாகம் ஏற்படுத்தி கொடுத்து அதை நாம் பயன்படுத்தி ஆரோக்கியத்திற்கு வித்திட்டுள்ளார்'' என்றார்.