அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 2 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அரியலூருக்கு ரூ.325 கோடி, கள்ளக்குறிச்சிக்கு ரூ.325 கோடி என மொத்தம் 650 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
இதில், மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதமாகவும் இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை தமிழக சுகாதாரத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.