மத்திய பட்ஜெட் வரும் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு தொடங்க உள்ளது.
பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தொழிற்துறையினரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் சந்தித்து பேச உள்ளார். முதலாவதாக விவசாய மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் துறையை சேர்ந்தவர்களை சந்தித்து அத்துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் நிதியமைச்சர் கேட்டறிய உள்ளார். கொரோனா கால கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு இந்த சந்திப்பு காணொலி முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.