தமிழ்நாடு

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி

Rasus

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

2018-19-ம் ஆண்டிற்கான அகழாய்வை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன்மூலம் கீழடியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014-ம் ஆண்டு கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. 4 கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வுப் பணியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல்வேறு அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், இரும்பாலான போர்க் கருவிகள் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆச்சரியமளிக்கும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும் தொல்பொருள் ஆய்வில் கிடைத்தன. இந்நிலையில், 5-ஆம் கட்ட ஆய்வுப் பணிகளில் மேலும் பல தொல்பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,