மகேந்திரகிரியிலுள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும மையம் அருகே அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வெடித்தது தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள திரவ இயக்க உந்தும மையம் அருகே பயங்கர வெடிசத்தம் எழுந்தது. பின்னர் சத்தம் வந்த இடத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இந்தப் புகை, மலை பகுதியில் மேலேழும்பி பரவியதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெடித்தது என்ன பொருள் என்று தெரியவில்லை. அடையாளம் தெரியாத பொருள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பொருள் வெடித்ததை அந்தபகுதியினர் படம் பிடித்துள்ளனர்.மகேந்திரகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து விமானம் பறப்பதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. மகேந்திரகிரி மலையில் நேற்று நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.