ஒட்டன்சத்திரம் அருகே வாழைமரத்தின் அடிப்பகுதியில் குலை தள்ளிய அதிசயம் நடந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரிய கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள சீனிவாசன். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரஸ்தாளி வாழை கன்றை நடவு செய்திருந்தார். பொதுவாக வாழை மரத்தின் மேல் பகுதியில்தான் குலை தள்ளுவதை பார்த்திருப்போம்.
ஆனால் சீனிவாசன் வீட்டில் உள்ள வாழை மரத்தின் அடிப்பகுதியில் குலை தள்ளி இருந்தது. இதை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் தினமும் வாழை மரத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒட்டு வாழை ரகங்களில் சத்து குறைபாடு காரணமாகவே இதைப்போன்று அடிமரத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இது வாடிக்கையாக நிகழ்வல்ல. இப்படி இருந்தால் அதிகளவு விளைச்சல் இருக்காது என்று கூறினார்.