தமிழ்நாடு

மருமகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி: மாமனார் கைது

மருமகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி: மாமனார் கைது

webteam

சென்னையில் மருமகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேகா - தீபக் தம்பதியினர். கடந்தாண்டு சுரேகாவின் மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்தி வந்துள்ளது. சுரேகா தவறானவர் என்றும் அவரைப்பற்றியும் மோசமாக தொடர்ந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து தனது கணவரிடன் சுரேகா தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் இத்தம்பதியினர் புகார்  அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சுரேகாவின் செல்போனின் IMI எண்ணை வைத்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியவர் குறித்து துப்புதுலக்கினர். போலீசாரின் விசாரணையில் சுரேகாவுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது அவரது மாமனார் கபாலி (எ) கபாலீஸ்வரன்(52) என்பது தெரியவந்தது. கபாலி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.