தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டையில் இடிதாக்கி 60 ஆடுகள் பலி..!

உளுந்தூர்பேட்டையில் இடிதாக்கி 60 ஆடுகள் பலி..!

Veeramani

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே  ஒரு விவசாயிக்கு சொந்தமான 60 ஆடுகள் இடிதாக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள  உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை தன்னுடைய விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வளர்த்து வந்தார், நேற்று இரவு ராமச்சந்திரனின் ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை  மற்றும் இடி காரணமாக இடிதாக்கி கொட்டகையில் கட்டப்பட்டிருந்த  60 ஆடுகள் கருகி பலியாகின.  இதுகுறித்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.