யூஜிசி வகுத்துள்ள தகுதி கொண்ட மற்றும் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் விவரங்களை கேட்டு உயர்கல்வித் துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யூ.ஜி.சி வகுத்துள்ள விதிகளின்படி இல்லாவிட்டால், அவர்களை பணியிலிருந்து விடுவிக்க பல்கலைக்கழகங்கள் சுற்றறிக்கை அனுப்பின.
இந்நிலையில், யூ.ஜி.சி வகுத்துள்ள தகுதியை 6 மாதங்களுக்குள் பெறக்கூடியவர்கள், 6 மாதங்களிலிருந்து 12 மாதங்களுக்குள் பெறக் கூடியவர்கள், 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் பெறக்கூடியவர்கள் எனத் தனித்தனியாக விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. தகுதியற்றவர்களை பணிகளில் இருந்து விடுவிப்பதற்காக இந்த விவரங்கள் கோரப்படுகின்றனவா அல்லது தகுதிபெற கால அவகாசம் வழங்க கோரப்படுகின்றனவா என்பது குறித்து விவரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.