தமிழ்நாடு

இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்

Rasus

குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, அதன்பின்னர் ஆணவக் கொலைக்கு எதிராக குரல் கொடுத்து சமூகப்
பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு அரசுப் பதவியும் வழங்கப்பட்டது. இதனிடையே நிமிர்வு கலையகத்தின் பொறுப்பாளர் சக்தி என்பவரை சமீபத்தில் கவுசல்யா மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, சக்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்கள் மூலம் வைக்கப்பட்டது. அது சர்ச்சையாகவும் மாறியது.

இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.