Udhaynidhi Stalin PT Web
தமிழ்நாடு

மாணவி அனிதா குறித்தான ஆவணப்படம்... கண்ணீர்விட்ட அமைச்சர் உதயநிதி

மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அமைச்சர் உதயநிதி கண்கலங்கினார். பலமுறை தன் கண்களைத் துடைத்துக் கொண்டதும் நிகழ்ந்தது.

அங்கேஷ்வர்

நீட் தேர்வு ரத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. மதுரையை தவிர்த்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். மதுரையில் அதிமுக மாநாடு நடக்க இருப்பதால் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அமைச்சர் உதயநிதி கண்கலங்கினார். பலமுறை தன் கண்களைத் துடைத்துக் கொண்டதும் நிகழ்ந்தது.