cm vijay - udhayanidhi ani
தமிழ்நாடு

'1974-இல் என்ன நடந்தது தெரியுமா..' முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னையில் அடுத்தடுத்து கொலை குற்றங்கள் அரங்கேறியிருப்பதற்கு முதல்வர் விஜயை விமர்சித்து பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

Rishan Vengai

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் 100 நாட்களை கடந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தீவிரமாக பேசப்படும் சூழலில், கடன் தொல்லை குறித்து புகார் அளித்த இளைஞர் பிரதீப்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் மிரட்டிய வீடியோவுக்குப் பிறகு நடந்த இந்தக் கொலை குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து, காவல்துறையினரே முதல்வரை DUMMY CM என நினைக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்களை கடந்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன. பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றிற்கு முதல்வர் விஜய் முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், தொடர்ந்து பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

udhay

இந்தசூழலில் கடன் தொல்லை கொடுக்கிறார்கள், காவல் ஆய்வாளரே மிரட்டுகிறார் என இளைஞர் ஒருவர் புகாரளித்ததாக வெளியான சம்பவத்திற்கு பின், அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?

காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.