தமிழ்நாடு

“திமுகவில் என்னை யாரும் முன்னிலைப்படுத்தவில்லை” - உதயநிதி

“திமுகவில் என்னை யாரும் முன்னிலைப்படுத்தவில்லை” - உதயநிதி

JustinDurai
'கொரோனா முடிவுக்கு வந்ததும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல் தொடர்பாக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார்' என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
 
கடலூர் மாவட்டம் வடலூரில் திமுக சார்பில் நடந்த விழாவில் காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அவரிடம் பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர். பின்னர் 'புதிய தலைமுறை'க்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், ''திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்கள் பல்வேறு விதமான எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் நடந்த அநீதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்ததும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். திமுகவில் என்னை யாரும் முன்னிலைப்படுத்தவில்லை'' என்றார். கொரோனாவில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்தாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, இந்த கேள்வியை சுகாதாரத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.