தமிழ்நாடு

பெண்களுக்கான இருசக்கர வாகன மானியம் ரூ.25ஆயிரமாக உயர்வு

webteam

பெண்கள் இருசக்கர வாகனத் திட்டத்தின் மானியத்தொகையின் உச்சவரம்பு 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், பெண்கள் இருசக்கர வாகன மானியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுமெனத் தெரிவித்தார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை மக்களுக்கு உரிய நேரத்தில் உயர்தரமான மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மகளிர் சுகாதாரத் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் மற்றும் அம்மா மகப்பேறு சஞ்சீவி உள்ளிட்ட புதுமையான முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். திருமண உதவித்திட்டம், சமூக பாதுகாப்பு உதவித் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நிதியுதவிகள், தொட்டில் குழந்தைத் திட்டம், முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு விடுதி வளாகங்கள் போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.